ஜான்வி கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ள ‘கோலமாவு கோகிலா’... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. யோகிபாபுவும் அந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது கோலமாவு கோகிலா படம் இந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது. அந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். அந்தப் படத்தை ஜாசித்தார்த் சென்குப்தா என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு 'குட் லக் செர்ரி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 29-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வெளியாகியுள்ள போஸ்டரில் ஜான்வி கபூர் கையில் துப்பாக்கியுடன் அப்பாவியாகக் காணப்படுகிறார்.
நயன்தாரா நடிப்பை ஜான்வி சமன் செய்வாரா என்று படம் வந்த பிறகு பார்ப்போம்!