பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பை முடித்த க்ரித்தி சனோன்!

kriti-sanaon-34

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் நடிகை க்ரித்தி சனோன் தனது பகுதியை நடித்து முடித்துள்ளார். 

பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை  க்ரித்தி சனோன் சீதையாக நடிக்கிறார். மேலும் நடிகர் சன்னி சிங் லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சைப் அலி கான் வில்லனாக நடிக்கிறார்.

Kriti

நடிகை க்ரித்தி சனோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். ஆதிபுருஷ் படத்தில் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் க்ரித்தி சனோன் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் படத்தில் தனக்கான பகுதியில் நடித்து முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"இந்த பயணம் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது என்று என்னால் நம்ப முடியவில்லை! இந்த சூப்பர் ஸ்பெஷல் கேரக்டரை நான் முடிந்துவிட்டதால் என் இதயம் மூழ்குகிறது: நான் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்: ஜானகி! அவளுடைய அன்பான இதயம், அவளுடைய பக்தியுள்ள ஆன்மா மற்றும் அவளது அசைக்க முடியாத வலிமை எங்கோ எப்போதும் எனக்குள் இருக்கும்!" என்று க்ரித்தி தெரிவித்துள்ளார். 


ஆதிபுருஷ் திரைப்படம் 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆதிபுருஷ் திரைப்படம் 3டி டெக்னலாஜியில் இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story