கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொமொரு பிரபல நடிகை!
மற்றுமொரு திரையுலகப் பிரபலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகை க்ரித்தி சானொன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு ராஜ்குமார் ராவ் உடன் தான் நடிக்கும் படத்திற்காக க்ரித்தி சானொன் சண்டிகருக்கு சென்றிருந்தார். பின்பு படப்பிடிப்பை முடித்த அவர் சண்டிகரில் இருந்து திரும்பியுள்ளார். தற்போது அவர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது.

ஆனாலும் க்ரித்தி சானொன் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் “நான் ஒரு நொடி கூட என் மாஸ்க்கை அகற்ற மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார். அப்படியிருக்க தற்போது க்ரித்தி கொரோனாவுக்கு இரையாகியிருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இளம் பாலிவுட் சீரியல் நடிகை திவ்யா பட்னாகர் கொரோனா வைரசுக்கு பலியானது பாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.