"நடிகைகளின் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் குறைக்கின்றனர்"-பிரபல நடிகை புலம்பல்
1778718621000
பாலிவுட் முன்னணி நடிகை கிரித்தி சனோன் (35), திரைத்துறையில் காணப்படும் பாலின பாகுபாடு மற்றும் சம்பள விஷயம் குறித்து அவர் கூறியதாவது: எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் எனது உழைப்பால் மட்டுமே பெற்றேன். எதுவும் எனக்கு தானாக முன்வந்து தட்டில் வைத்து கொடுக்கப்படவில்லை. திரைப்பட பட்ஜெட்டில் பெரும்பகுதி ஆண் நடிகர்களுக்கு ஒதுக்கப்படுவதால், செலவுகளை குறைப்பதற்காக நடிகைகளின் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் குறைக்கின்றனர்.
படப்பிடிப்பு தளங்களில் ஆண் நடிகர்கள் காத்திருக்க கூடாது என்பதற்காக, நடிகைகளை முதலில் தயாராக சொல்லும் பழக்கம் இருக்கிறது. ஆரம்பகாலத்தில் ஒரு சாதாரண ஆண் நடிகருக்கு வழங்கப்பட்ட சொகுசு கார் வசதி கூட எனக்கு வழங்கப்படவில்லை. இத்தகைய பாகுபாடுகள் மற்றும் மனநிலை, இப்போது கூட திரையுலகில் மிகப்பெரிய பிரச்னையாக நீடித்து வருகிறது. இது எப்போது மாறும் என்று தெரியவில்லை