பிரபல பாடகி லதா மங்கேஸ்வருக்கு கொரோனா உறுதி... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு வயது 91.
பாடகி லதா மாங்கேஸ்வர் கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு நிமோனியா இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்கிடையில், அவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தவறான செய்திகள் வெளியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகி என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் மற்றும் தாதாசாகேப் பால்கே விருதுகள் மற்றும் பல தேசிய மற்றும் பிலிம்பேர் விருதுகள் என அவர் வாங்காத விருதுகளே இல்லை என்றே கூறலாம்.
தற்போது அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர இந்தியாவே பிரார்த்தி வருகிறது.