20 கோடி பார்வைகளுடன் 1000 கோடி வசூல் செய்த காஞ்சனா ரீமேக்!
தியேட்டர்கள் முடக்கத்தால் ஓடிடி தளங்கள் இந்திய மார்க்கெட்டில் அழுத்தமாக கால் பதிக்கத் தொடங்கிவிட்டன. தியேட்டர்களில் படங்கள் வெளியாகும் போது, அந்த நடிகர்களின் ரசிகர்களைத் தவிர பொதுவான பார்வையாளர்கள் ரிவியூ அல்லது ரேட்டிங்க் பார்த்துவிட்டு தான் படம் பார்க்கச் செல்வர்.
ஆனால் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாவதில் மக்கள் ரிவியூ , ரேட்டிங்க் இவற்றைப் பற்றி கவலைப்படாமல் படத்தைப் பார்க்கின்றனர். அதனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் பரவலாக பார்வைகளைப் பெற்று வருகின்றன.

மிஸ் இந்தியா, வி மற்றும் நிசப்தம், பென்குயின் போன்ற படங்கள் எதிர்மைறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் அந்தப் படங்கள் அதிக பார்வைகளைப் பெற்றிருந்தன.
அந்த வகையில் தற்போது ஹாட்ஸ்டாரில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள லக்ஷ்மி படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. காஞ்சனா படம் அளவிற்கு லக்ஷ்மி இல்லை என்பதே பெரும்பாலோனோர் கருத்து.

இருந்தாலும் இப்படம் சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வெளியான லக்ஷ்மி படம் 24 மணி நேரத்தில் 200 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பார்வைகளை டிக்கெட் கணக்கில் பார்த்தால் இப்படத்தின் வசூல் 1000 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் ஹாட்ஸ்டாரில் சுஷாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ‘தில் பெச்சாரா’ படம் அதிக பார்வைகளைப் பெற்றிருந்தது. தற்போது லக்ஷ்மி படம் அந்தச் சாதனையை முறியடித்துள்ளது. தில் பெச்சாரா 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. லக்ஷ்மி 200 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.