பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்... திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி !

SulochnaLatkar

பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் சுலோச்சனா லட்கர். பழம்பெரும் நடிகையான அவர், கடந்த 1930-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 1946-ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் சினிமா நடிகையாக அறிமுகமானார். கட்டி பட்டங், மேரே ஜீவன் சாதி, உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

SulochnaLatkar

அதன்பிறகு இந்தியில் அவர் நடித்த கோரா ஆர் காலா, சம்பூர்ண ராமாயணா உள்ளிட்ட பல படங்கள் மிகவும் புகழ்பெற்றார். சினிமாவில் அவர் செய்த சாதனைக்காக கடந்த 1999-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இதுதவிர பல பிலிம்பேர் விருதுகளையும், மாநில மொழி விருதுகளையும் பெற்றார். 

SulochnaLatkar

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நலம் நலிவுற்று இருந்தார்‌. இதையடுத்து கடந்த மாதம் உட நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலையில் மோசமடையவே வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த அவர், நேற்று மாலை உயிரிழந்தார். நடிகை சுலோச்சனாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

Share this story