இந்தியில் வெப் சீரிஸாக ரீமேக் ஆகும் மோகன்லாலின் பிளாக்பஸ்டர் திரைப்படம்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன லூசிபர் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றி பெற்றது. பிரித்விராஜ் தான் அறிமுகமான முதல் படத்திலே சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தைக் கொடுத்து சிறந்த இயக்குனர் என்று பெயர் எடுத்தார். அதையடுத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் விரைவில் அது துவங்கப்படும் என்றும் ஏற்கனவே ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பிரித்வி ராஜ் லூசிபர் படத்தை இந்தியில் 8 எபிசோட்கள் கொண்ட வெப் சீரிஸாக ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் முடிவான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மோகன்லால் அதில் நடிக்கலாம் அல்லது நடிக்காமலும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது லூசிபர் திரைப்படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறத. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.