5D டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாபாரதம்’... பட்ஜெட் சுமார் 700 கோடியாம்..

mahabharatam

மிகப் பெரிய காவியமான ‘மகாபாரதம்’ 5டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட இதிகாச தொடர்கள் மிகவும் புகழ்பெற்றவர்கள். இந்த தொடர்கள் மொழிகளை கடந்த ரசிகர்களிடையே வரவேற்பை ஒளிப்பரப்பாகின. 1964-ஆம் ஆண்டுகளிலேயே இந்த தொடர்கள் உருவாகி பார்வைகளுக்கு விருந்து படைந்தது. 

mahabharatam

இந்நிலையில் மகாபாரதம் இதிகாசம் உச்சபட்ச டெக்னாலஜியான 5டியில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. சுமார் 700 கோடியில் உருவாகும் இந்த திரைப்படத்தை வரும் 2025-ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த தொடர் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. 

பலமொழிகளில் உருவாக உள்ள இந்த தொடரில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், பரேஷ் ராவல், நானா படேகர், அனில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். 5டி டெக்னாலஜியில் 3 மணி நேரம் உருவாகும் இந்த படத்தை ஃபிரோஸ் நதியாத்வாலா தயாரிக்கவுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story