‘அனிமல்’ பட இரண்டாம் பாகத்தில் நடிகை ‘மாளவிகா மோகனன்’!.....
அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை மாளவிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில், டி-சிரீஸ் வழங்கும் படம் ‘அனிமல்’ இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ மூலமாக கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். படத்தில் அனில் கபூர், சுரேஷ் ஓப்ராய், ராஷ்மிகா மந்தனா என நடித்துள்ளனர். படத்திற்கு மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ஒரு புறம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் மறுபுறம் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.
தொடந்து படம் ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என முதல் பாகத்திலேயே கூறியிருந்தனர். அதன்படி இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகை மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாப்பாதிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.