பாலிவுட்டில் வைரலாகும் ”விஜய் தி மாஸ்டர்” போஸ்டர் !
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்தின் ரிலீசிற்கு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கடந்த வாரம் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி வைரல் ஆனது. தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி டைட்டில் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ”விஜய் தி மாஸ்டர்” என பெயரிடப்பட்டு அதன் போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் படம் சென்சாருக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.படத்திற்கு தணிக்கைக்குழு யு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.