விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்.
1696319115905

இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை ‘அந்தாதுன்’ பட இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ராதா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியானது. தற்போது அதுவும் மாற்றப்பட்டுள்ளது, டிசம்பர் 8ஆம் தேதியே படம் வெளியாகும் என அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.