நானி நடிப்பைப் பார்த்து பலமுறை அழுதிருக்கிறேன்... ஷாஹித் கபூர் ஓபன் டாக்!

நானி நடிப்பைப் பார்த்து தான் பல முறை அழுதுவிட்டதாகப் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகராக உருவெடுத்து வருகிறார். தற்போது தனது கேரியரில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வகையில் தீவிரமாக உழைத்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ;அர்ஜுன் ரெட்டி; திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ;கபீர் சிங்; படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
தற்போது ஷாகித் கபூர் நானி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜெர்சி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் ஷாகித் கபூர் ஜெர்சி படம் குறித்து பேசியுள்ளார். ஜெர்சி படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். அந்தப் படத்தில் நானியின் நடிப்பைப் பார்த்து நான் பலமுறை அழுதிருக்கிறேன். எனக்கு நாற்பது வயதாகிறது எனவே அதிக காலம் கழித்து வெற்றியை சுவைக்கும் வந்த அனுபவத்தை என்னுடன் அதிகம் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். ஏனென்றால் நான் பல காலங்களுக்கு பிறகு வெற்றியை சந்தித்தவன். ஜெர்சி ஒரு குடும்ப படம். எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்று தெரிவித்துள்ளார். ஜெர்சி இந்தி ரீமேக்கிற்கு பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.