மும்பையில் நயன்,விக்கி தம்பதி; ‘ஜவான்’ திரைப்படத்தின் ஷூட்டிங் – வெளியானது ஸ்டைலிஷ் புகைப்படம்.

photo

 ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகநாக நடிக்கும் திரைப்படம் ‘ஜவான்’  இந்த திரைப்படத்தில் இவருடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடிசேர உள்ளார்.  தொடர்ந்து தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார்.  இந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக நடிகை நயன்தாரா தனது கணவர் விக்கியுடம் மும்பை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

 முன்பெல்லாம்,  பொதுவெளியில் அதிகம் தலைக்காட்டாத நயன்தாரா, தற்போது திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் அதிகமாக அவரை வெளியில் காணமுடிகிறது. அந்த வகையில் தற்போது மும்பையில் பாஸ்டியனில் காணப்பட்ட நயன் விக்கி புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு செம ஸ்டைலிஷ்ஷாக வெள்ளை நிற கிராப் டீ மற்றும் டெனிமில் அணிந்துள்ளார். விக்கி கருப்பு நிற உடையில் காணப்படுகிறார்.

photo

ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜவான் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

photo

Share this story