போதைப்பொருள் வழக்கில் ரியா சக்ரபோர்த்திக்கு சம்மன் அனுப்பியுள்ள என்சிபி!

போதைப்பொருள் வழக்கில் ரியா சக்ரபோர்த்திக்கு சம்மன் அனுப்பியுள்ள என்சிபி!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான ரியாவை விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Rhea Chakraborty remembers Sushant Singh Rajput, says 'still struggling to  face my emotions'
இந்த வழக்கில் ரியாவின் தம்பி ஷோயிக் சக்ரவர்த்தி (24), ராஜ்புத்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா (33) மற்றும் சுஷாந்தின் தனிப்பட்ட ஊழியர்களில் ஒருவரான தீபேஷ் சாவந்த் ஆகியோரை என்சிபி சமீபத்தில் கைது செய்தது. மேலும் சிலரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி  ரியா, அவரது சகோதரர்,  மேலாளர் ஜெயா சஹா, சுஷாந்தின் இணை மேலாளர் ஸ்ருதி மோடி மற்றும் கோவாவைச் சேர்ந்த ஹோட்டல் கவுரவ் ஆர்யா ஆகியோர் மீது போதைப்பொருள் மற்றும் மனோவியல் தொடர்பு பொருட்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் என்சிபி வழக்கு பதிவு செய்திருந்தது.
Rhea Chakraborty's brother, Sushant Singh Rajput aide held, NCB says  probing Bollywood 'drug network' | India News,The Indian Express
ரியா மற்றும் ஸ்ருதி மோடி, மிராண்டா மற்றும் சுஷாந்தின் பிளாட்மேட் சித்தார்த் பிதானி ஆகியோருக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் பகிர்வுகளை வைத்து இந்த போதைப்பொருள் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்குப்  பிறகு சுஷாந்தின் மரண வழக்கில் என்சிபி மூன்றாவதாக இணைந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

Share this story