பாலிவுட்டில் உருவாகியுள்ள புதிய ட்ரெண்ட்… பங்குபெறும் இயக்குனர்கள்!
சோசியல் மீடியாக்களில் ஒவ்வொரு சீசனுக்கு ஒரு ட்ரெண்ட் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே க்ரீன் இந்தியா சேலஞ்ச் திரைத்துறையினர் இடையே மிகவும் வைரலாக மாறியது. அதேபோன்று தற்போது பாலிவுட் இயக்குனர்கள் தங்களின் முதல் சம்பளம், மற்றும் முதல் சம்பளம் வாங்கிய வயது ஆகியவற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆர்டிகிள் 15, தப்பாட் போன்ற வெற்றிப் படங்களின் இயக்குனர் அனுபவ் சின்ஹா தன்னுடைய முதல் சம்பளத்தை வெளியிட்டுள்ளார்.
“முதல் சம்பளம்- ரூ .80; வயது -18; கல்லூரியில் பயிலும் போது புகைக்கும் பழக்கத்திற்காக சம்பாதிக்க 7 ஆம் வகுப்பு மாணவருக்கு கணக்கு டியூஷன் எடுத்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து இயக்குனர் ஹன்சல் மேத்தா அனுபவ் சின்ஹாவின் பதிவை மேற்கோள் காண்பித்து “முதல் சம்பளம்- மாதத்திற்கு 450 ரூபாய்: வயது -16; என் ஜூனியர் கல்லூரி ஆடைகளுக்குப் பணம் சம்பாதிக்க ஃபூவின் ஜீன்ஸ் மற்றும் சாதாரண உடைகளை விற்கும் இன்டர்ஷோப் கெம்ப்ஸ் கார்னரில் விற்பனையாளராகப் பணிபுரிந்தேன் ”என்று‘ அலிகார்’ இயக்குனர் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு பலர் தங்களின் முதல் சம்பளம் மற்றும் சம்பளம் வாங்கிய வயதை வெளிப்படுத்தி வருகின்றனர்.