ஷாருக்கான் மகனை போதை பொருள் வழக்கில் கைது செய்த அதிகாரிக்கு இப்படி ஒரு நிலையா!

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானின் கை அசைவிற்காக தினமும் அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் கூட்டம் கூடுவது வழக்கம். இப்படி தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையும், நற்பெயரையும் கொண்டுள்ளார் ஷாருக்கான். ஆனால் அவரது மகனான ஆர்யன் கான் கடந்த 2021ஆம் ஆண்டு மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்துவிட்டார். இந்த விவகாரம் மிகப்பெரிய பேசு பொருளானது. தொடர்ந்து இது தொடர்பான செய்தி காட்டு தீபோல பரவியது.
இந்த வழக்கிற்கு பிறகு வழக்கிற்கு பிறகு போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குநராக இருந்த சமீர் வான்கடே இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதாவது ஆர்யன் கான் வழக்கில் சோதனை நடத்திய போலீஸ் அதிகாரியான விஷ்வ விஜய் சிங் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டது மட்டுமில்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குநரான சத்ய நாராயண பிரதான் கூறுகையில், “டிஸ்மிஸ் ஆன விஜய் சிங், ஆர்யன் கான் வழக்கில் இல்லாமல் வேறு ஒரு வழக்கு தொடர்பாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்”. என தெரிவித்துள்ளார்.