ராமர் கதாபாத்திரத்திற்கு பிரபாஸை தேர்வு செய்ய என்ன காரணம்? இயக்குனரின் சுவாரசியமான பதில்!
பிரபாஸ் தற்போது ‘தன்ஹாஜி’ படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத்-வுடன் கூட்டணி அமைத்துள்ளார். படத்திற்கு ‘ஆதிபுருஷ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ராமாயண கதையை அடிப்படையாயாகக் கொண்டு 3டி டெக்னாலஜியில் நேரடியாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. T-Series நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம்.
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் கடவுள் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். நடிகை கீர்த்தி சுரேஸை சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ராமராக நடிக்க பிரபாஸை தேர்ந்த்தேடுக்கக் காரணம் என்ன என்று இயக்குனரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “பிரபாஸ் சரியானவர் என்று நான் நினைக்கிறேன். அவரது முழு ஆளுமை, அவருக்கு இருக்கும் அமைதி. அவரது கண்கள் மிகவும் ஆழமானவை, அவரது நிலைப்பாடு, அவர் தன்னை சுமந்து செல்லும் விதம். நான் அவரை ராமராகப் பார்க்க முடிந்தது. அவர் இல்லையென்றால், நான் இந்த படம் எடுத்திருக்கவே மாட்டேன்.” என்று கூறினார்.
“இது ராமபிரபுவின் கதை. இது காவிய சரித்திரத்தின் ஒரு அம்சம். அந்த காவியத்தை தழுவி எடுக்கப்படும் படம். பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதிர்ஷ்டவசமாக, ஏற்கனவே ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு குறிப்புகள் உள்ளன. “ஆனால் நீங்கள் ஒரு திரைத் தழுவல் செய்யும்போது, நம்பகத்தன்மை, தொழில்நுட்பக் கண்ணோட்டங்களிலிருந்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டி உள்ளன. நிறைய ஸ்டோரிபோர்டுகள் தயார் செய்கிறோம். ” என்றும் ஓம் ராத் தெரிவித்துள்ளார்.