ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்ட பாக் கிரிக்கெட் வீரர்.

 aishwaryarai

மாடல் அழகியும், நடிகியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து தான் கூறிய கருத்து தவறு என மன்னிப்பு கேட்டுள்ளார் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்.

 aishwaryarai

முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்த்தால் நடக்காது என பேசியிருந்தார். இது சர்ச்சையாகவே பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், வாய்தவறி அந்த வார்த்தை வந்துவிட்டது என்றும், இதற்காக ஐஸ்வர்யா ராயிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this story