‘பிரனீதி சோப்ரா, ராகவ் சதா’ நிச்சயதார்த்த கிளிக்ஸ்.

photo

பிரபல பாலிவுட் நடிகை பிரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம் பி ராகவ் சத்தாவின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

photo

 பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வரும் பிரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி எம் பி ராகவ் சதாவை  காதலிப்பதாக செய்திகள் பரவியது. அதற்கு எற்றார் போல இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தன.  இந்த நிலையில் டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் இவர்களது நிச்சதார்த்தம் கோலாகலமாக நடந்துள்ளது. அப்போது எடுத்துக்கொண்ட புகைபடங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார், தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், காங்கிரச் தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய  அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

photo

 

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரினீதி சோப்ராவின் அத்தை மகளான ப்ரியங்கா சோப்ரா அமெரிக்காவிலிருந்து வந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story