சம்பவம் செய்ய தயாரான படக்குழு! - ‘பதான்’ டிரைலர் குறித்த அறிவிப்பு, போஸ்டருடன் வெளியீடு.

photo

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பதான்’ இந்த படத்த இயகுநரான சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில்  படம் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

photo

ஏற்கனவே பதான் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரின் படி படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

photo

போஸ்டரில், ஷாருக்கான் ஒரு ஆடோமேட்டிக் துப்பாக்கியை வைத்திருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் தீபிகா அசத்தலான நீல நிற உடையில் துப்பாக்கியை வைத்திக்கிறார். பேடி ஜான் ஆபிரகாம் போஸ்டில் மிரட்டலான வகையில் இருக்கிறார். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் வெளியாகவுள்ளதால். டிரைலரை உற்று நோக்க அதிக வாய்ப்புள்ளது. எனினும் டிரைலரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.

photo

Share this story