ஷாருக்கானின் ‘பதான்’ காவி உடை சர்ச்சை... அதிரடி உத்தரவு பிறப்பித்த தணிக்கைத்துறை !

pathan song controversy

ஷாருக்கானின் ‘பதான்’ பாடல் சர்ச்சையில் அந்த காட்சிகளை நீக்க தணிக்கைத்துறை உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பதான்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

pathan song controversy

இப்படத்திலிருந்து பேஷ்ராம் ராங் என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்றாலும் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்குக் காரணம் இந்த பாடலில் தீபிகா படுகோனே காவி உடையில் பிகினி அணிந்தது தான் என்று கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக அமைச்சர்கள் இந்துத்துவ அமைப்புகள் என பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். 

இந்நிலையில் இந்த படம் அனுமதிக்காக சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இந்த படத்தை சென்சார் போர்டு அதிகாரிகள், படத்தில் உள்ள காவி பிகினி உடை காட்சிகளை மீண்டும் படமாக்கி சேர்க்கவேண்டும் அல்லது நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். இது படக்குழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story