குறுகிய கண்ணோட்டத்துடன் சமூக ஊடக பார்வை இருக்கிறது - காவி உடை சர்ச்சைக்கு ஷாருக்கான் மறைமுக பதிலடி !

pathan

காவி உடை சர்ச்சைக்கு நடிகர் ஷாருக்கான் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். 

 பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'பதான்'. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படத்திலிருந்து பேஷ்ராம் ராங் என்ற பாடல் வெளியானது. 

 pathan

இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்றாலும் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்குக் காரணம் இந்த பாடலில் தீபிகா படுகோனே காவி உடையில் பிகினி அணிந்தது தான் என்று கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக அமைச்சர்கள் இந்துத்துவ அமைப்புகள் என பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 

pathan

ஆனால் ஷாருக்கான் இது குறித்து பேசாத நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இதில் பேசிய ஷாருக்கான், குறுகிய கண்ணோட்டத்துடன் சமூக ஊடகங்கள் செயல்பட்டு வருகிறது. எதிர்மறையான பார்வையால் சினிமா பாதிக்கிறது. இப்பொழுது சினிமா இன்னும் தனது முக்கியமான வேலையை செய்ய வேண்டி இருக்கிறது என நான் நம்புகிறேன். மேலும் எதிர்மறையான பார்வை அதிகரிக்கும் போதே அதன் மதிப்பு உயரும் என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார். சமீப காலமாக எழுந்த சர்ச்சைக்கு இது கடுமையான பதிலடியாக பார்க்கப்படுகிறது. 

Share this story