ஓராண்டு ஆகியும் விலகாத மர்மம்… சுஷாந்த் சிங் நினைவு தினத்தில் கொந்தளிக்கும் ரசிகர்ள்!
இன்று நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நினைவு தினத்தை அடுத்து சமூக வலைதளங்களில் அவர் குறித்த பதிவுகள் வைரலாகி வருகிறது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 14-ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் எழுப்பினர். அவரது இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடினர். அதன்பின்னர் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணையின் போது வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டன. பின்னர் வழக்கு போதைப்பொருள் கோணத்திற்கு மாறியது.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய பிரபலங்கள், நடிகர்கள் என பலர் இந்த வழக்கில் சிக்கினர். வழக்கில் நடந்த ஒவ்வொரு அசைவும் மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது.
இன்றோடு சுஷாந்த் இங்கே இறந்து ஒரு வருடம் முழுமையடைந்து விட்டது. எனவே அவரது நினைவு தினத்தை அடுத்து சுஷாந்தின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
மேலும் சுஷாந்த் போன்ற மனிதநேயம் படைத்த நல்ல ஒரு நடிகரை இழந்தது இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பு என்றும் அவரது ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.