பாஹுபலியை மிஞ்சிய பிரம்மாண்டம்… ராமாயணக் கதையில் நடிக்கும் பிரபாஸ்!?
ராஜமௌலி இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக வெளியான ‘பாஹுபலி’ இந்திய அளவில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபீஸிலும் பல சாதனைகளை நிகழ்த்தியது. அதைத்தொடர்ந்து பாஹுபலி இரண்டாம் பாகத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இரண்டாம் பாகமும் முதல் பாகத்தின் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கியது. இந்த இரு படத்தின் மூலமே பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்து பெற்றார். பின்னர் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே 300 கோடி, 400 கோடி என பிரம்மாண்ட பட்ஜெட் படங்களாகவே அமைய ஆரம்பித்துவிட்டன.
பிரபாஸ் தற்போது ‘தன்ஹாஜி’ படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத்-வுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். இந்தப் படம் வரலாற்றுக் கதை அடிப்படையில் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு ‘ஆதிபுருஷ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை பிரபாஸ் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் ராமாயண கதாபாத்திரங்கள் இடம் பெற்றது போல் இருப்பதைக் காணலாம். இந்தப் படம் ராமாயண கதையை அடிப்படையாயாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இயக்குனர் ஓம் ரவுத் சில காலமாக ராமாயண கதையைப் படமாக எடுக்க பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நேரடியாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.