பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஆதிபுருஷில் ராகவா என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார், ஜானகியாக கிருத்தி சனோன் நடிக்கிறார். லங்கேஷ் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்கிறார். இந்தப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
தற்போது ஆதிபுருஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் 23-ம் தேதி காலை 07.11 மணிக்கு பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பிரபாஸ் அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.