"பிரியங்கா சோப்ரா அந்த காட்சியில் நடிக்க தயங்கினார்"-எந்த காட்சி தெரியுமா ?

priyanka chopra Nick Jones

பாலிவுட் நடிகர் அன்னு கபூர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் செய்யும் செயல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் படுக்கயறை, முத்தக்காட்சி என நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது சில நடிகர்கள் வேண்டுமென்றே கட்டுப்பாட்டை இழந்து நடிகைகளிடம் அநாகரீகமாக நடந்துகொள்கிறார்கள்.
இயக்குனர் கட் சொன்ன பிறகும் அத்துமீறலை அந்த நடிகர்கள் தொடர்கிறார்கள். எனக்கு தெரிந்து ஒரு ஹீரோ அப்படி அத்துமீறியதால், நடிகை பயந்துபோய் அங்கிருந்து தப்பியோடி, 2 நாட்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. நடிகரின் இதுபோன்ற செயல் சினிமாவின் இருண்ட மறுபக்கத்தை காட்டுகிறது. அதேபோல விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வெளியான ‘சாத் கூன் மாஃப்’ என்ற படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நான் நடித்திருந்தேன். அந்த படத்தில் ஒரு முத்தக் காட்சி இருந்தது. முதலில் பிரியங்கா சோப்ரா அந்த காட்சியில் நடிக்க தயங்கினார்.
அந்த காட்சியை நீக்கும்படி இயக்குனரிடம் கூறினார். ஆனால், இயக்குனர் அந்தக் காட்சி ஒரு காரணத்திற்காக எழுதப்பட்டது என்றும் அதை நீக்க முடியாது என்றும் சொல்லிவிட்டார். இந்த செய்தி எனக்கு தெரியவந்ததும், நான் இதுபற்றி பிரியங்கா சோப்ராவிடம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரு நடிகை பதட்டமாக உணர்ந்தால், அவர் நலமாக இருக்கிறாரா என்று மட்டுமே நான் கேட்பேன். அதற்கு மேல் நான் எதுவும் கேட்க மாட்டேன். ஏனெனில் அது அவரை மேலும் சங்கடப்படுத்தக்கூடும். வேறு வழியின்றி அவர் அதில் நடித்தார்.

Share this story