முதல் முறையாக மனம் திறந்த ‘பிரியங்கா சோப்ரா’ – வாடகைதாய் முறையை தேர்ந்தெடுக்க காரணம் இதுதான்.

photo

முன்னணி பாலிவுட் நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கடந்த கடந்த 2018 ஆம் ஆண்டு, அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு வாடகை தாய் முறை மூலமாக அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மால்டி மேரி என பெயர் சூட்டினர் பிரியங்கா, நிக் ஜோன்ஸ் தமபதி. இந்த நிலையில் தான் ஏன் வாடகைதாய் முறையை தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்து முதல்முறையாக  மனம் திறந்து பேசியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

photo

photo

அதாவது நாற்பது வயதாகும் பிரியங்கா சோப்ரா ‘தனக்கு மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்ததால்தான் வேறு வழியில்லாமல் வாடகைதாய் முறையை நாடியதாக’ தெரிவித்துள்ளார். சினிமாவை கடந்து இந்த தம்பதி சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். தொடர்ந்து தங்கள் மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

photo

Share this story