"படத்தின் கதையை வெளியே கசியவிட்டார்"தீபிகா படுகோன் மீது குற்றச்சாட்டு கூறிய ப்ரொட்யூசர்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ், திரிப்தி டிம்ரி நடிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற பான் இந்தியா படத்தில், இந்திய படவுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு அவராகவே இப்படத்தில் இருந்து விலகினார். இந்தநிலையில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரின் சகோதரருமான பிரணாய் ரெட்டி வங்கா, தீபிகா படுகோன் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோன் 10 சதவீதம் லாப பங்கீடு வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். படத்தின் பட்ஜெட் காரணமாக அவரது கோரிக்கையை ஏற்க முடியாமல் வேறு நடிகையை தேர்வு செய்ய முற்பட்டபோது, படத்தின் ரகசியமான கதையை வேண்டுமென்றே அவர் வெளியே கசியவிட்டார்’ என்று குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே தீபிகா படுகோன் தரப்பில், இயக்குனரை அவர் ஒருமுறை மட்டுமே நேரில் சந்தித்ததாகவும், முழு கதையையும் கேட்காத நிலையில் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பாலிவுட் திரைத்துறையில் ஹீரோயின்களுக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதாகவும், ஆணாதிக்க மனப்பான்மையே இது போன்ற சில குற்றச்சாட்டுகளுக்கு காரணம் என்றும், சோஷியல் மீடியாவில் வெளியான கருத்துகளுக்கு தீபிகா படுகோன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

