ஆபாசப்படத்தில் நடிக்க என்னையும் அழைத்தார்.. ராஜ் குந்த்ரா மீது பாலிவுட் பகீர் புகார் !
ஆபாச செயலிக்காக நடிக்க மறுத்ததால் தனது மொபைல் எண்ணை ராஜ் குந்த்ரா வெளியிட்டதாக பகீர் குற்றச்சாட்டை நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆபாச படங்களை தயாரித்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டு வருவதாக ராஜ் குந்த்ரா மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. இதேபோன்று தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி 3 பெண்கள் ராஜ் குந்த்ரா மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், ராஜ் குந்த்ராவுக்கு இதில் தொடர்பு இருந்ததால் சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து ராஜ் குந்த்ராவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆரம்பத்தில் 2 முதல் 3 வரை வருமானம் கிடைத்ததாகவும், பின்னர் அது 8 லட்சம் வரை உயர்ந்ததாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார். மேலும் ஆபாச படங்களை இந்தியாவிலேயே எடுத்ததாகவும், அதன்பிறகு இங்கிலிருந்து வெளியிட்டால் மாட்டிக்கொள்வோம் என்பதால், அந்த வீடியோக்களை லண்டனில் இருந்து பதிவேற்றியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் குந்த்ரா மீது பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, பரப்பரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில், ராஜ் குந்த்ரா தன்னுடைய ஹாட்ஷாட் செயலில் நடிக்க தன்னை அழைத்தார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். மேலும் என்னுடைய இந்த செயலால் விரக்தியான ராஜ் குந்த்ரா, என்னுடைய மொபைல் எண்ணை சமூக ஊடகத்தளத்தில் லீக் செய்து விட்டார். அடுத்தடுத்து வரும் புகாரால் பாலிவுட்டில் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.