ஆபாச செயலி வழக்கு... நடிகை ஷில்பா ஷெட்டி கைதா ?
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபராகவும் இருப்பவர் ராஜ் குந்த்ரா. இவர் தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக்கொண்டிருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ராஜ் குந்த்ராவை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். மும்பையில் பெண்களை வைத்து ஆபாசம் படம் எடுத்து, அதை லண்டனில் உள்ள உறவினர் மூலமாக செயலி பதிவேற்றம் செய்து வந்துள்ளார் ராஜ் குந்த்ரா. இதனால் நாள் ஒன்றிற்கு 8 லட்சம் வரை வருமான ஈட்டியதாக வாக்குமூலமாக ராஜ் குந்த்ரா அளித்துள்ளார். ராஜ் குந்த்ராவின் வாக்குமூலத்தை கேட்ட போலீசார் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விசாரணையில் அடுத்தடுத்த வெளியாகும் உண்மையால் இந்த வழக்கு சூடுபறக்க தொடங்கியுள்ளது. ராஜ் குந்த்ராவையடுத்து அவரது மனைவி ஷில்பா ஷெட்டியையும் விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர். ஏனென்றால் ஷில்பா ஷெட்டி இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகத்து வருகின்றனர். அதை உறுதிப்படுத்த ஷில்பா ஷெட்டியின் வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்துதான் இந்த ஆபாசம் படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் ஷில்பா ஷெட்டி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.