படம் இயக்க தயாராகும் பிரபல நடிகர் -யார் தெரியுமா ?
1794969034000
ரன்பீர் கபூர், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அடுத்த 3 ஆண்டுகளில் எனது முதல் படத்தை இயக்குவேன். இதற்காக சில மாதங்களுக்கு முன்பே திரைக்கதை எழுத தொடங்கிவிட்டேன். திரைக்கதை அமைப்பது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை இப்போது உணர்கிறேன். எனது இயக்கத்தில் உருவாகும் இந்தி படத்தில் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன். முற்றிலும் ஒரு இயக்குனராக மட்டுமே பணியாற்றுவேன். ஆண்டுக்கு 100 முதல் 125 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கிறேன் என்பதால், கதை எழுத நிறைய நேரம் கிடைக்கிறது’ என்றார்.

