குட்டி தேவதைக்கு தாயான ஆலியா பட்.. பிரபல ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள் !

alia bhat

ரன்வீர் மற்றும் ஆலியா பட் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

பாலிவுட்டில் பிரபல நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் ரன்வீர் கபூர் மற்றும் ஆலியா பட். சில ஆண்டுகளாக காதலித்த வந்த இவர்கள், கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். பிரம்மாண்டமான நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தனர். 

alia bhat

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியட் பட் அறிவித்தார். மருத்துவமனையில் ரன்வீருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து ஆலியா பட்டுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். 

alia bhat

இந்நிலையில் ஆலியா பட் மற்றும் ரன்வீர் ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்து அதிகார்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். குட்டி தேவதைக்கு தாயான ஆலியா பட்டிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

Share this story