ரன்வீர் கபூரின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் ‘அனிமல்’... படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்

animal

 ரன்வீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

animal

பிரபல பாலிவுட் நடிகராக ரன்வீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இந்த படத்தை இயக்கி வருகிறார். அதனால் ‘அர்ஜூன் ரெட்டி’ படம் போன்று வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படமும் உருவாகி வருகிறது. 

animal

இந்த படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தந்தை மற்றும் மகனின் உணர்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. 

animal

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக தயாரிப்பு பணிகள் உள்ளது. 

 

Share this story