ரன்வீர் சிங் உடன் சமந்தா... புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனரா!?

நடிகை சமந்தா ரன்வீர் சிங்குடன் காணப்படும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமந்தா தற்போது இந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார். சமந்தா பற்றிய செய்திகள் வந்தாலே அவை ட்ரெண்டிங் ஆகிவிடுகின்றன. அவரது புகைப்படங்கள் வெளியானால் அவை பல அனுமானங்களை உருவாக்குகின்றன.
சமந்தா தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படம் பேசு பொருளாகியுள்ளது. சமந்தா மற்றும் ரன்வீர் இருவரும் இணைந்து புதிய விளம்பரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
விளம்பரத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள படப்பிடிப்புத் தளத்தில் தான் சமந்தா ரன்வீர் உடன் புகைப்படம் எடுத்துள்ளார். பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலமாகத் தான் சமந்தா இந்தியில் அறிமுகமானார்.
டாப்சி தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தான் சமந்தா இந்தியில் அறிமுகம் ஆகும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தப் படம் விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.