திக் திக் நிமிடங்கள்... 'ராட்சசன்' இந்தி ரீமேக் ட்ரைலர் & ரிலீஸ் தேதி வெளியானது!

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ராட்சசன்' இந்தி ரீமேக்கின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
2018-ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ராட்சசன். இந்தியாவின் மிகச்சிறந்த சைக்கோ திரில்லர் படங்களில் ராட்சசனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.
பின்னர் ராட்சசன் திரைப்படம் பெல்லம்கொண்டா சீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தெலுங்கிலும் ரீமேக் ஆகி ஹிட் ஆனது. தற்போது ராட்சசன் இந்தியிலும் ரீமேக் ஆகி உள்ளது.
அக்ஷய் குமார், ராட்சசன் இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் படத்தை இயக்கிய ரஞ்சித் எம் திவாரி தான் ராட்சசன் இந்தி ரீமேக்கையும் இயக்கி உள்ளார். பூஜா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கட்புட்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதே சீரியல் கில்லர் கதை ஊட்டி மாதிரியான குளிர் மலை பிரதேசமான கௌசாலி என்ற இடத்தில நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ராட்சசன் ஏற்படுத்திய அதே தாக்கத்தை இந்தி ரீமேக்கும் ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பாப்போம்.
இந்தப் படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.