ஊர்வசி ரத்தேலா நடிப்பில் 'திருட்டுப் பயலே 2' படத்தின் இந்தி ரீமேக்... ரிலீஸ் அப்டேட்!

தமிழில் திறமைமிக்க இயக்குனர்களில் ஒருவர் சுசிகணேசன். இவர் இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார், விரும்புகிறேன், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடிப்பில் 'திருட்டு பயலே 2' திரைப்படத்தை இயக்கினார் சுசிகணேசன்.
அந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது திருட்டுப்பயலே 2 திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. அந்த படத்தை சுசு கணேசன் தான் இயக்கி வருகிறார். படத்திற்கு தில் ஹே கிரே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதயத்தின் நிறம் சாம்பல் என்று அதற்கு தமிழில் பொருள்.
இந்தி ரீமேக்கில் வினித் குமார் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார் . பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா கதாநாயகியாக நடித்துள்ளார். . அக்ஷய் ஓபராய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தி ரீமேக்கிலும் சுசிகணேசன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நடிகை ஊர்வசி ரத்தேலா சரவணா ஸ்டோர்ஸ் அருள் கதாநாயகனாக நடிக்கும் தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.