'83' திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய சச்சின்... மனம் நெகிழ்ந்த ரன்வீர் சிங்!

ranveer-singh-33

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 83 படத்தைப் பாராட்டியுள்ளார். 

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்போது கபில் தேவ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார்.  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த நிகழ்வு '83' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. 

கபீர் கான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். அவரின் மனைவியாக தீபிகா படுகோனே நடித்தார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார். 

83-movie

83 திரைப்படம் கடந்த டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் பார்க்கும் அனைவர்க்கும் 1983-ம் வருடத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. படத்தைப் பலரும் பாராட்டினர். 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் 83 படத்தைப் பாராட்டியுள்ளார். "83 படத்தின் ரன்வீர் சிங் மிகவும் அருமையாக பணியாற்றி ஆல் ரவுண்டர் வேலை பார்த்துள்ளார். "உண்மையில் கபில் தேவின் அனைத்து பக்கங்களையும், குணாதிசயங்கள் பார்த்து திளைத்துள்ளேன். படம் எங்களின் முதல் உலகக் கோப்பை வெற்றியின் சின்னச் சின்ன தருணங்களை நினைவுகூர வைக்கின்றன.


அந்த வெற்றி இந்த சிறுவனுக்கு எவ்வளவு உத்வேகம் அளித்தது என்பதை நான் அறிவேன்" என்று தெரிவித்துள்ளார். 

"அந்தச் சிறுவன் பின்னாளில் எத்தனை தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தார் என்பதை நாங்கள் அறிவோம். நன்றி, மாஸ்டர்! இது எனக்கு எல்லாமே கிடைத்தது போல இருக்கிறது" என்று ரன்வீர் சிங் பதிலளித்துள்ளார். 

Share this story