ஷாருக்கான் மகளுடன் அமிதாப் பேரன் டேட்டிங்கா ?... தீயாய் பரவும் தகவல் !

ஷாருக்கான் மகளுடன் அமிதாப் பேரன் டேட்டிங்கில் இருப்பதாக இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும், சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர். ஆர்யன் கான், தற்போது திரைப்படம் ஒன்றை இயக்குவதில் பிசியாக இருக்கிறார். அதேபோன்று சுஹானா கான், தி ஆர்ச்சீஸ் என்ற படம் ஒன்றில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சஹானா கானுடன் இணைந்து திரையுலகின் முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் நடித்துள்ளனர். அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர், தேவரங் ரெய்னா, அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா, யுவராஜ் மெண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த படத்தில் நடித்தபோது சஹானாவும், அகஸ்தியா நந்தாவும் நட்பாக பழகி வந்ததாகவும், அது நாளடைவில் அடுத்தக்கட்டத்திற்கு சென்று அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாக கூறப்படுகிறது. சுஹானா கான் - அகஸ்தியா நந்தா டேட்டிங் விஷயம் அகஸ்தியாவின் தயாரான ஸ்வேதா பச்சனும் தெரியும் என கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.