‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கிலிருந்து சைப் அலி கானின் மிரட்டல் போஸ்டர் வெளியானது!

saif-ali-khan-23

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் படத்திலிருந்து சைப் அலி கானின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.  

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.  மாதவனும், விஜய் சேதுபதியும் ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து நடிப்பில் மிரட்டியிருந்தனர்.

vikram vedha

தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர்- காயத்ரியே இந்தி படத்தையும் இயக்கி வருகின்றனர்.  இப்படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கேரக்டரில் சயீப் அலிகானும் நடித்து வருகின்றனர். 

Vikram

சில வாரங்களுக்கு முன்பு படத்திலிருந்து ஹ்ரித்திக் ரோஷனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்நிலையில் தற்போது விக்ரம் கதாபாத்திரத்தின் அதாவது சைப் அலி கானின் போஸ்டர் வெளியாகியுள்ளது. கண்ணாடி அணிந்து பக்கா மாஸ் லுக்கில் காணப்படுகிறார் சைப் அலி கான். 

படம் குறித்த கூடுதல் அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story