ஏற்கனவே இந்திய மக்கள் தொகைக்கு நான் நிறைய செஞ்சுட்டேன்... சைப் அலி கானின் அதிரடி நகைச்சுவை பதில்!

கலந்து சில நாட்களாக நடிகை கரீனா கபூர் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவர் பொது வழியில் காணப்பட்டபோது வயிறு சற்று பெரிதாக இருந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதாக சில மீடியாக்கள் செய்து வெளியிட்டு வருகின்றன. ஆனால் அது உண்மை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கபூர் தான் கர்ப்பமாக இல்லை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். "அது பாஸ்தாவும் ஒயினும் மட்டும் தான் மக்களே. அமைதியாக இருங்கள், நான் கர்ப்பமாக இல்லை. என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "நாம் ஏற்கனவே இந்திய மக்கள் தொகைக்கு அதிகம் பங்களித்து விட்டோம் என்று சைப் ஏற்கனவே என்னிடம் கூறிவிட்டார்" என்றும் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அவரது இந்த பதில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு கரீனா கபூர், நடிகர் சைஃப் அலி கானை மணந்தார். கரீனா 2016 மற்றும் 2021 ஆண்டிகளில் இரு மகன்களைப் பெற்றெடுத்தார்.