வில்லனின் இன்ட்ரோ காட்சிக்கு மட்டும் 10 கோடி செலவு செய்யும் சல்மான் கான் படக்குழு!

salman-khan-3

சல்மான் கானின் புதிய படத்தில் வில்லனின் இன்ட்ரோ காட்சிக்கு மட்டும் இன்றைக்கு மட்டும் 10 கோடி ரூபாய் செலவு செய்வதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து படங்களும் கமர்ஷியல் மசாலா படங்களாக அமைந்து வருகின்றன. எனவே அவர் படங்கள் அனைத்தும் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. சல்மான் கான் நடிப்பில் வெளியான 'ஏக் தா டைகர்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகமான 'டைகர் ஜிந்தா ஹை'  திரைப்படமும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 

tiger-34

தற்போது அந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. அந்த படத்தில் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கிறார். அவரது இன்ட்ரோ காட்சி சிறப்பு ஸ்டண்ட் குழுவால் டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்படுவதற்கு 10 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

emraan-hashmi-34

இம்ரான் அந்தப் படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஐஎஸ்ஐ ஏஜென்ட் ஆக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தின் மிக முக்கியம் என்பதால் அவருக்கு இவ்வளவு செலவு செய்து இன்ட்ரோ கொடுக்க படக்குழு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களும் இவ்வளவு பெரிய தொகையை வில்லனின் என்ட்ரிக்காக க செலவு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்களாம். சல்மான் மற்றும் கத்ரினா கைப் இருவரும் படப்பிடிப்பு இணைந்துள்ளனர். 

Share this story