பாலிவுட்டில் பரபரப்பு!…, சல்மான் கானுக்கு ரவுடிகளால் கொலைமிரட்டல்.

photo

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

photo

தனக்கென தனிரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். 57 வயதாகும் நிலையிலும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக வாழந்து வருகிறார். இவர் அவ்வப்போது சில நடிகைகளுடன் காதல்  கிசுகிசுக்களில் சிக்குவது வாடிக்கையான ஒன்று. 1988ல் தனது திரைவாழ்க்கையை தொடங்கிய நிலையில் இன்று வரை அதே எனர்ஜியுடன் நடித்து அசத்தி வருகிறார்.

photo

தமிழில் அஜித், தமன்னா, நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானவீரம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்தில் பூஜா ஹெக்டே உடன் நடித்துள்ளார். தொடர்ந்து டைகர்3 படத்திலும் நடித்துவருகிறார்.இந்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

photo

அதாவது சல்மான் பாயின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாந்த் குஞ்சல்கருக்கு “சல்மான் கான் கொலை செய்யப்படுவார்” என்ற மின்னஞ்சல் வந்துள்ளது. இதனை பார்த்ததுன் அதிர்ந்து போன பிரசாந்த் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் என்பவர்கள் தான் அந்த மிரட்டலை விடுத்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பஞ்சாப் பாடகர் இந்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story