அந்த 8 வருடங்கள் மிகவும் மோசமானவை... சல்மான் கான் குறித்து முன்னாள் காதலி ஓபன்டாக் !
சல்மான் கானுடன் இருந்த அந்த 8 ஆண்டுகள் மிகவும் மோசமானவையாக இருந்ததாக அவரது முன்னாள் காதலி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான் கான். இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கும் அவர், பல நடிகைகளுடன் காதலில் இருந்து பின்னர் பிரிந்துவிட்டார். அப்படி தான் கடந்த 1991-ஆம் ஆண்டு இந்தி நடிகை சோமி அலியை காதலித்து வந்தார். 8 ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள் கடந்த 1999-ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு சல்மான் கான் காதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதில் சல்மான் கானுடன் இருந்த அந்த 8 ஆண்டுகள் மிகவும் மோசமானவை. அவர் என்னை தாக்கியதோடு தொடர்ந்து அவதூறாக பேசுவார். 8 ஆண்டுகளாக காதலில் இருந்து அதை வெளியில் சொல்லவில்லை. அவரது நண்பர்கள் முன்பு பலமுறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்.
ஆண் என்ற பிற்போக்கான தைரியம் இருந்தது. அதனால் வசவு பேச்சு, பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். தொடர்ந்து பல துன்பங்களை அனுபவித்ததால் தான் அவரை விட்ட பிரிந்தேன். இதை இத்தனை ஆண்டுகள் கழித்து கூறுவதற்கான காரணம் என்ன என்று கேட்கலாம். ‘இது பிரேக்கிங் நியூஸ் அல்ல’ என்று பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சோமி அலி வைத்துள்ளார்.