சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3... அக்டோபர் 16-ம் தேதி ட்ரைலர் ...

சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3... அக்டோபர் 16-ம் தேதி ட்ரைலர் ...

டைகர் 3 திரைப்படத்தின் முன்னோட்டம் வரும் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

2012ல் வெளியான முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்ற சல்மான் கானின் 'டைகர்' கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதை தொடர்ந்து 'டைகர் ஜிந்தா ஹே' என்ற படம் 2017-ம் ஆண்டு வெளியானது. இதனை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்தார். இதன் மூன்றாம் பாகம் தற்போது 'டைகர் 3' என்ற பெயரில் உருவாகி வருகிறது.

சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3... அக்டோபர் 16-ம் தேதி ட்ரைலர் ...

மணீஷ் சர்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் சல்மான்கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this story