நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்... பேமிலி மேன் சீரிஸ் குறித்து மௌனம் கலைத்த சமந்தா!

samantha-34

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸில் தான் நடித்த கதாபாத்திரம் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது.  சீரிஸில் ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்ததாகப் பல புகார்கள் எழுந்தன. அதையடுத்து அந்த வெப் சீரிஸைத் தடை செய்யவேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். இருப்பினும் ஈழத் தமிழர்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் கூட்டணி அமைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் காண்பித்துள்ளதால் வரும் காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதான பார்வையை இந்த வெப் சீரிஸ் மாற்றிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. மேலும் அதில் சமந்தாவின் கதாபாத்திரத்திற்கும் அதிக எதிர்ப்பு கிளம்பியது. 

samantha

அதைப் பற்றி நீண்ட நாட்களாக வாய் திறக்காமல் இருந்து வந்த சமந்தா தற்போது மௌனம் களைத்துள்ளார். "நான் அதில் ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்ததாக அவர்கள் எண்ணினால் உங்கள் மனதை புண்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன், ஏனெனில் இது நான் வேண்டுமென்றே செய்யவில்லை. நான் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, நான் அவ்வாறு செய்திருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய கதாபாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டது என்று சிலர் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே உண்மையாக மன்னிப்பு கேட்கிறேன்." என்றுதெரிவித்துள்ளார். 

 சமந்தா சீரிஸில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this story