சமந்தாவின் சர்ச்சை தொடரின் மூன்றாம் பாகம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
சமந்தாவின் நடிப்பில் வெளிவந்த ‘பேமிலி மேன்’ வெப் தொடரின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிகம் வரவேற்பை பெற்ற வெப் தொடர்களில் ஒன்று ‘தி பேமிலி மேன்’. அமேசான் பிரைமில் வெளியான இந்த தொடரின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது. இந்த வெப் தொடரை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் இணைந்து இயக்கினர்.
இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். சமந்தா ராஜி என்ற கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தனர். தீவிரவாத கும்பலுடன் இணைந்து செயல்படும் ஸ்லீப்பர்செல் ஏஜெண்டாக சமந்தா நடித்திருந்தார். வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திருந்த சமந்தாவின் நடிப்புக்கு பெரிய பாராட்டு கிடைத்தது.
அதேநேரம் தமிழர்களை இழிவுப்படுத்தியதாக பல்வேறு சர்ச்சைகளிலும் இந்த வெப் தொடர் சந்தித்தது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள இந்த தொடரையும் ராஜ் மற்றும் டி.கேதான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#TheFamilyManOnPrime S3: call chellam sir he will tell you that this is absolutely true ??#PrimeVideoPresentsIndia #SeeWhereItTakesYou pic.twitter.com/9AgaNAA5TK
— amazon prime video IN (@PrimeVideoIN) April 28, 2022