மெல்போர்ன் விருது விழாவில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சமந்தா!

தி பேமிலி மேன் வெப் சீரிஸுக்காக சமந்தா சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார்.
இந்தியாவின் அதிக வரவேரற்பு பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்று தி பேமிலி மேன். எனவே அந்த சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது தி பேமிலி மேன் சீரிஸ் இரண்டாம் பாகம். தவிர, மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸை ராஜ் மற்றும் டிகே இருவர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். இந்த சீரிஸில் சமந்தா வெறித்தனமாக நடித்திருந்தார். சமந்தா ராஜி என்ற கதாபாத்திரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தார். நடித்துள்ளார். இதற்கிடையில் இந்த சீரிஸ் விடுதலைப் புலிகள் அமைப்பையும் இலங்கைத் தமிழர்களையும் தவறாகச் சித்தரித்ததாக கடும் கண்டனங்கள் எழுந்தன.
ஆனால் மற்ற மொழிகளில் ரசிகர்கள் இந்த சீரிஸைக் கொண்டாடினர். மேலும் இந்த சீரிஸின் மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது.
#JustAnnounced ✨BEST PERFORMANCE FEMALE (SERIES)✨
— Indian Film Festival of Melbourne (@IFFMelb) August 20, 2021
CONGRATULATIONS TO Samantha Akkineni for THE FAMILY MAN S2 @Samanthaprabhu2 #TheFamilyMan2 pic.twitter.com/AC2hOiftlC
இந்நிலையில் தற்போது சூர்யா சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். ஆம், மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சமந்தா நடிகையாக வெப் சீரிஸ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதையடுத்து சமந்தாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.