சமந்தாவின் 'சிட்டாடல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி..!
1728634851000

நடிகை சமந்தா பாலிவுட்டில் "சிட்டாடல்" என்ற தொடரில் நடித்து வந்த நிலையில், அந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியானது. ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த "சிட்டாடல்" என்ற வெப் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதே தொடர் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜ் & டி கே இயக்கத்தில் உருவாகிய இந்த தொடரில், சமந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்காக நடிகை சமந்தா கடுமையான உடற்பயிற்சி செய்து, உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், "சிட்டாடல்" வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில், பாலிவுட் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Amazon Prime original series #CitadelHoneyBunny Trailer to be released on October 15th. pic.twitter.com/5F6UFROClH
— Global OTT (@global_ott) October 9, 2024