கணவரைக் கன்னத்தில் அறைந்த வீடியோவை வெளியிட்டுள்ள சாமுராய் நடிகை!

கணவரைக் கன்னத்தில் அறைந்த வீடியோவை வெளியிட்டுள்ள சாமுராய் நடிகை!

நடிகை அனிதா ஹசானந்தனி தன் கணவரை கன்னத்தில் அறைந்த விடியோவைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தி நடிகை அனிதா ஹசானந்தனி தமிழில் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து விக்ரம் நடித்த ‘சாமுராய்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதையடுத்து சில தமிழ் படங்களிலும், மற்ற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் பல தொடர்களிலும் நடித்து வருகிறார்.

கணவரைக் கன்னத்தில் அறைந்த வீடியோவை வெளியிட்டுள்ள சாமுராய் நடிகை!

அனிதா ஹசானந்தனி 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடிகளில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அனிதா. குழந்தையுடன் மற்றும் கணவருடன் கழிக்கும் மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஒரு மேஜிக் ட்ரிக் செய்வதாகக் கூறி அவரது கணவரை ஏமாற்றி விளையாட்டாக அவரது கன்னத்தில் அடிக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அவர் மனைவிகள் செய்ய விரும்பும் ஒரு மேஜிக் ட்ரிக். இந்த மேஜிக் ட்ரிக்கை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story